முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை திரட்டுவதில் பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ராஜபக்சவினருக்கு எதிரான பல வழக்குகளில் மோசடிகளுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், சொத்து விபரங்களைத் தேடிக் கொள்ள முடியாமல் போனதை வாய்ப்பாக பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தப்பித்துக் கொண்டிருக்கின்றது.
பசில், நாமல், யோசித்த ஆகியோர் பல்வேறு நிதி மோசடிகளில் கைது செய்யப்பட்ட போதும் இதனை வாய்ப்பாக்கிக் கொண்டு பிணையில் வெளிவந்து விடுகின்றனர்.
இந்நிலையில் ராஜபக்சவினரின் மோசடிகளைத் தேடுவதற்குப் பதிலாக அவர்களின் சொத்துக்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.
தற்போதைக்கு மஹிந்த, பசில், கோத்தபாய மற்றும் நாமல், யோசித்த ஆகியோருக்குச் சொந்தமான சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.
இவற்றில் சில சொத்துக்கள் முன்னைய வழக்குகளுடனும் தொடர்புபட்டுள்ளன.
எனினும் எதிர்வரும் நாட்களில் ராஜபக்சவினரின் சொத்து விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி வளம் கிடைத்த வழிவகைகளை வெளிப்படுத்துமாறு கோரும் வகையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் பிணையில் வெளிவர முடியாத சிக்கலில் மாட்டி, ராஜபக்ச குடும்பம் விழி பிதுங்கி நிற்கும் என்றும் கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment