படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களினதும் விசாரணைகளை
துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஆட்சியின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் தொடர்பில் வலியுறுத்த முடியாத நிலைமையே இருந்து வந்தது.
எனினும், இன்று அந்த நிலை மாற்றமடைந்துள்ளதனால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கவும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment