June 2, 2016

கச்சதீவில் தேவாலயம் அமைப்பதற்கு தமிழக முதல்வர் மீண்டும் எதிர்ப்பு!

கச்சதீவில் தேவாலயத்தை அமைக்கும் ஸ்ரீலங்காவிள் முயற்சியானது கடந்த இரண்டு வருடங்களில்
அதிகரித்து வரும் தமிழக மீனவர்களின் கைதுகளோடு தொடர்புடையது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை நிர்மாணிக்க முயல்வதை தான் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு தமிழக மீனவர்களை மீட்கக் கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீன்பிடிக்கான தடை நீக்கப்பட்டு இராமேஸ்வரத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற ஏழு தமிழக மீனவர்களை, அவர்களது விசை படகுகளுடன், ஸ்ரீலங்கா கடற்படை நேற்று செவ்வாய்கிழமை அதிகாலையில் கைது செய்ததோடு, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் தொடர் நிகழ்வுகள் அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துவதாகவும் தமிழக முதல்வர் அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை குறித்த வழக்கு இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment