June 2, 2016

நல்லாட்சியிலும் துன்பப்படும் தமிழ் மக்கள்!

நல்லாட்சி அரசாங்கத்திலும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும், ரெட் பிளக் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதிக்கிடைக்கும் என்ற நம்பிககை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

எனினும், 1978ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் நடைமுறைகள் தற்போதும் காணப்படுவதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான நிபுணர் எலன் கீன்ன கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம், இணை அனுசரணையில் யுத்தக்குற்றங்களை விசாரணை செய்ய, தென்னாபிரிக்க முறையிலான நல்லிணக்க ஆணைக்குழு யோசனையை முன்வைக்கப்பட்டதனை அந்த செய்தித்தாள் நினைவு கூறியுள்ளது.

இதேவேளை, சிலர் எண்ணுவதை போன்று மீளமைப்பை அவசரமாக கொண்டு வர முடியாடிதென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான பாதுகாப்பு செலவீனங்கள் 2014ஆம் ஆண்டை விடவும் 20 பில்லியன் ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் தமிழ் மக்கள் இன்றும் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு வரவில்லை என்பதனை தெளிவாக எடுத்து காட்டுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment