June 2, 2016

இலங்கை அரசாங்கத்தை சாடிய சர்வதேச மன்னிப்புசபை!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காணாமல் போனோர் தொடர்பிலும் அரசாங்கத்தினால் முன்னெடுப்புக்கள் மேற் கொள்ளப் படவில்லை.


எனினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மாத்திரமே முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றின்மூலம் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கம், ஜெனீவாவில் இணை அனுசரணையில் யோசனை ஒன்றை ஏற்றுக்கொண்டது

அதில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு உறுதிமொழிகளை வழங்கியது.

எனினும் தற்போது அதனை கவனிக்காமல் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவருகிறது.

இதன்காரணமாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், மற்றும் நீதியைக்கோரி நிற்பவர்கள் நிர்க்கதிநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக இராணுவத்தினர் பிடித்துவைத்துள்ள காணிகளின் சொந்தக்காரர்கள், தமது காணிகள் விடுவிக்கப்படும் நாளை எதிர்ப்பார்த்துள்ளனர்.

அண்மையில் தமது குழுவினர் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு சென்றபோது பலர் இன்னும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்துவருவதாக காணமுடிந்தது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment