June 6, 2016

மன்னார் மனித புதைகுழி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்ப சி.ஐ.டி கோரிக்கை!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனைகள் குறித்து
அமெரிக்காவில் உள்ள புலோரிடா மாநிலத்திற்கு அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் (சி.ஐ.டி) மன்னார் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை(6) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகள் குறித்து காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,

“அமெரிக்காவில் உள்ள புலோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு மனித எச்சங்களை அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் (சி.ஐ.டி) மன்னார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

எனினும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். இவ்விடையம் சம்மந்தமாக அதற்கு நாங்கள் ஏற்கனவே எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

குறித்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம் இல்லை. இந்த நிறுவனம் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுகின்றது என்பது குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

நாங்கள் நன்கு அறிந்து கொண்ட விடயம் சம்மந்தமான ஏற்கனவே மாத்தளை புதைகுழியின் போதும் இந்த அமெரிக்கா நிறுவனம் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மிருகத்தின் எலும்புக்கூடுகள் என்ற தகவலை தந்த அடிப்படையில் காணாமல் போனவர்கள் சார்பில் இந்த அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில் இவ்வடையம் குறித்து நாம் எதிர்ப்பை தெரிவித்தோம்.

காணாமல் போனவர்கள் சார்பாகவும் ,எங்களினால் முன் வைக்கப்பட்டிருந்த மூன்று நிறுவனங்களிடமும் தொடர்பை ஏற்படுத்தி அவற்றின் அறிக்கையினை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் 01-08-2016 மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அது மட்டுமல்ல மனித புதைகுழிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கிணறு தொடர்பான வழக்கும் இன்றைய தினம்(6) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது ஏற்கனவே சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர், வைத்திய ரட்ன மனித புதைகுழி அகழ்வது தொடர்பான ஒரு ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்படுவதாகவும், குறித்த ஒழுங்கு விதிகள் சுகாதார அமைச்சிடம் இருந்து நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுமதி பெற்ற பின் நீதிமன்றத்தின் அனுமதியோடு கிணற்றின் அகழ்வு பணியை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.

அதற்கமைவாக குறித்த வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் 01-08-2016 அன்று மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment