June 30, 2016

விசாரணைகளின் பின்னர் யோசித்த தண்டிக்கப்படுவார்! இலங்கை கடற்படை அறிவிப்பு!

முன்னாள் லெப்டினன் யோசித்த ராஜபக்ஸ மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்க வேண்டும் என இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.


யோஷித ராஜபக்ஸ 74 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ள்ளதாகவும் இவற்றில் 24 பயணங்களுக்கு மாத்திரமே இலங்கை கடற்படையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

கடற்படை ஊடக பேச்சாளர் அக்ரம் அலவியிடம், ஏன் இன்னும் யோசித்த ராஜபக்ஸ குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர், ஜனவரி 30 திகதி யோசித்தவை கைது செய்ததாகவும், பெப்ரவரி 28ம் திகதி அவருக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment