June 30, 2016

பிரிட்டனின் வெளியேற்றத்தால் இலங்கைக்கு ஏற்படப் போகும் பேராபத்து!

சமகாலத்தில் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என வர்த்தக சபையின் தலைமை பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகி செல்ல அந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகள் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டன் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரான, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாறுபடும் தன்மை, இலங்கைக்கு ஏற்பட்டுள்ள குறுகிய கால விளைவாக காணப்படலாம்.

இதன் காரணமாக இலங்கைக்கு வெளிநாட்டு நாணயத்தை ஈர்ப்பதற்கும் கடினமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நெருக்கடி ஏற்படும் போதும் தங்களுக்கு தெரிந்த துறையில் முதலீடு செய்வதற்கே முதலீட்டாளர்கள் விருப்புகின்றமையே இதற்கு காரணமாகும்.

அமெரிக்க டொலர், அமெரிக்க திறைசேரி உண்டியல்கள், தங்கம் போன்றவற்றை நோக்கி அவர்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

இதேவேளை, ஏற்றுமதி துறையினுள் இலங்கைக்கு நீண்ட கால விளைவுகளை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதியில் 10% வீதமானவை பிரிட்டனுக்கும் 30% வீதமானவை ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதே இதற்கான காரணமாகும். அதாவது கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் ஏற்றுமதிகளாகும்.

பிரிட்டனில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை, இலங்கையின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மேலதிகமாக இலங்கை பிரிட்டனுடன் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளுக்கு வரவுள்ளன.

ஜீஎஸ்பி பிளஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒப்பந்தங்களில் தொடர்ந்து பிரிட்டன் நீடிக்காமையினால் இந்த நிலைமையில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டுமென்றால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவாக்கப்பட வேண்டும்.

ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு 60% ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவாக்குவதற்கு புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட வேண்டும்.

இதேவேளை, புதிய தலைமுறைகளுக்கான தொழில்நுட்பம் ஊடாக இந்த நாட்டின் ஏற்றுமதி போட்டியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என வர்த்தக சபையின் தலைமை பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment