June 6, 2016

தலதா மாளிகையை விட பள்ளிவாசல் கோபுரம் உயர்வதா? - சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் !

கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான
‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது.

 
மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை பள்ளிவாசலின் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமிட்டு குறித்த பள்ளியின் நிர்மான பணிகளை நிறுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பொலிஸார் தலையிட்டு, கண்டி மாநகரசபை ஆணையாளரின் கடிதத்தை சமர்ப்பித்ததும் அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு அரம்பேபொல ரத்னசாரர் என்ற பௌத்த மதகுரு தலைமை தாங்கியுள்ளார். இன்னும் பல அமைப்புக்களும் இணைந்திருந்தன. அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களது அனுசரனையுடன் நிர்மான வேலைகள் முன் எடுக்கப்படுவதாகவும் பிலிமத்தலாவையிலுள்ள பித்தளை கைத்தொழில் முயற்சியாளர்களிடம் அதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது, ஸ்ரீ தலதா மாளிகையை விட 28 அடி உயரமான கோபுரம் என்றும் ஆப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment