May 21, 2016

களனி கங்கையில் நீர்மட்டம் குறைகிறது!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாகலங்கமுவ பகுதியில் 7.65 ஆடியாக இருந்த நீரின் கொள்ளளவு நேற்று 7.2 அடியாக குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஹங்வெல்லை மற்றும் ஹங்வெல்லை மேல் பிரிவுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதாக கொழும்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.ஜீ.பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் களனி கங்கையில் நீர் வடிந்தோடும் நிலை தொடர்வதாகவும், மழை குறைவடைந்துள்ளதனால் விரைவில் நீர்மட்டம் இன்னும் குறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment