August 23, 2015

தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு தேசியப்பட்டியல் வாய்ப்பு நாகரிகமற்றது! கபே சாடல்!

தேர்தலில் போட்டியிட்டு பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது நாகரீமற்ற செயல் என்று கபே அமைப்பு சாடியுள்ளது.
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தலில் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது பின்கதவால் உள்ளே வருவதற்கு ஒப்பானது.
தேர்தல்கள் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் இது சட்டரீதியான ஒன்றுதான் என்ற போதிலும் அரசியல் நாகரீமற்ற ஒரு விடயமாகவே கருதப்பட வேண்டும்.
இவ்வாறான நாகரீமற்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் தீவிர எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும்.
அதன் மூலம் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலங்கள் திருத்தம் செய்யப்பட்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment