கர்நாடகாவில் பிரபல மூத்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்த கல்பர்கி, ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார்.
கல்பர்கி வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய பொலிசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கிய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணியளவில் கல்பர்கியின் வீட்டுக் கதவைத் தட்டிய மர்ம நபர், கல்பர்கி வெளியே வந்த போது கல்பர்கியை சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டார்.
தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என உறுதியாக நம்பப்படும் நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment