August 28, 2015

வவுனியாவில் லைக்கா கிராமம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அங்குரார்ப்பணம் !(படங்கள் இணைப்பு)

கடந்த 25 வருட காலங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து தற்காலிக வீடுகளில் அன்றாடம் அல்லல்பட்டு வாழ்ந்துவந்த பூந்தோட்ட அகதி முகாம்
மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் பூந்தோட்ட அகதி முகாமில் வசித்துவரும் 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் லைக்கா குடியிருப்பு அமைக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் காணி என்று வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் குறித்த 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. குறித்த லைக்கா கிராமத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.
லைக்கா மொபைல்ஸ் நிறுவனத் தலைவரும், ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டு லைக்கா கிராமத்தினை திறந்து வைப்பதோடு வீடுகளுக்கான அடிக்கல்லினை உத்தியோகபூர்வமாக நாட்டவுள்ளார்.
மேலும் இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிஸ்சந்திர மற்றும் ஞானம் அறக்கட்டளையின் இணை ஸ்தாபகர் ஞானம்பிகை அல்லிராஜா மற்றும் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவச்சாமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்விற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக்க ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
லைக்கான கிராமத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு நூற்றுக்கணக்கான வீட்டுப்பயனாளிகள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது பிரதான செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார்.






Sequence 18.Still005Sequence 18.Still004Sequence 18.Still003Sequence 18.Still002    Sequence 18.Still006 Sequence 18.Still008 Sequence 18.Still010 Sequence 18.Still011 Sequence 18.Still012 Sequence 07.Still002 Sequence 07.Still003 Sequence 07.Still006

No comments:

Post a Comment