August 24, 2015

சட்டவிரோதமாக வடிகட்டின தண்ணீர் யாழில் விற்பனை செய்ய முயற்சி!

வவுனியவில் இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டை பகுதியில் கடையில் குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு
விநியோகம் செய்யவிருந்த நிலையில் கன்ரர் வாகனத்துடன் தண்ணீர் போத்தல் என்பனவற்றுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான் 2ஆம் கட்டைப்பகுதியில் குடிதண்ணீர் வடிகட்டி விற்பனை செய்து வந்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட பொது சுகாதார பிசோதகர்கள் சுகாதாரத்திற்கு சீர்கேடான முறையில் காணப்பட்ட கிணறு, மலசலகூடம், என்பனவற்றில் சோதனை நடத்தியதுடன் கிணறு பல காலமாக குலோறின் இடப்படாமல் துப்பரவு மேற்கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் கன்ரர் வாகனத்தில் தண்ணீர் போத்தல்கள், மூடிகள், சீல் வைப்பதற்கான பொலித்தீன் என்பனவற்றை கைப்பற்றியதுடன் வடிகட்டின தண்ணீர் போhத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு விநியோகம் செய்விருந்ததாதக வாகன சாரதியின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பொது சுகாதார பரிசோதகாதர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாதிரிகள் என்பனவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்கள்.

No comments:

Post a Comment