August 24, 2015

காத­லி­யுடன் ஹோட்டலில் தங்­கி­யி­ருந்த காதலன் சட­ல­மாக மீட்பு!

பம்­ப­ல­ப்பிட்டி பகு­தியில் ‘ரிலேக்ஸ்’ ஹோட்­டலில் காதலி என அடை­யா­ளப்­ ப­டுத்­தப்­பட்ட யுவதி ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்த காதலன் ஒருவர் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்
.
வெல்­லம்­பிட்டி பிர­தே­சத்தை சேர்ந்த 25 வய­து­டைய மொஹம்மட் அனீஸ் ஹஸன் என்ற இளை­ஞரே இவ்­வாறு நேற்று சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குறித்த இளைஞன் தற்­கொலை செய்­து­கொண்­டாரா அல்­லது கொலை செய்­யப்­பட்­டாரா என்­பது குறித்து தீவிர விசார­ணைகள் இடம் ­பெற்­று­ வ­ரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது,
மொஹம்மட் அனீஸ் ஹஸன் புறக்கோட்டை பகு­தியில் தனது தந்­தைக்கு சொந்­த­மான கடை ஒன்றில் சேவை­யாற்றி வந்­துள்ளார். இந் நிலையில் திரு­ம­ண­மா­காத குறித்த இளைஞர் நேற்­று­முன்­தினம் பம்­ப­ல­ப்பிட்டி ரிலேக்ஸ் ஹோட்­ட­லுக்கு தனது காத­லி­யுடன் சென்று அன்­றைய தினம் இரவுப் பொழுதை அங்கு கழித்­துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை காதலி ஹோட்டல் அறையில் இருந்து வெளி­யே­றி­யுள்ளார். பின்னர் குறித்த ஜோடி தங்­கி­யி­ருந்த அறையை ஹோட்டல் ஊழி­யர்கள் சுத்­தி­க­ரிக்க சென்ற போது அங்கு தூக்கில் தொங்­கிய நிலையில் இளைஞன் சட­ல­மாக இருப்­பதைக் கண்­டுள்­ளனர்.
இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்ட நிலையில் பம்­ப­ல­ப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கமல் பெரே­ராவின் மேற்­பார்­வையில் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­னந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் ஹோட்டல் அறையில் தங்­கி­யி­ருந்த காதலி எனக் கூறப்­பட்ட பெண் விலை­மாது ஒருவர் என தெரி­ய­ வந்­துள்­ளது.
இளை­ஞனின் சட­ல­மா­னது பிரேத பரி­சோ­ த­னைக்­காக பொரளை பொலிஸ் பிரேத அறையில் வைக்­கப்பட்டுள்­ள­துடன் நேற்று மாலை­யாகும் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்த யுவதியிடம் பம்பலப்பிட்டி பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்திருந்தனர். மேல திக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். பிரேத பரிசோதனைகள் இன்றுஇடம்பெறவுள் ளன.

No comments:

Post a Comment