ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையின் பிரதி நாளை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது.
எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் விசாரணை நடத்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகும் முன்னதாகவே அந்த அறிக்கையை குறித்த நாட்டுக்கு இரகசியமாக வழங்குவது வழமையானதாகும்.அதன்படி இந்த அறிக்கை நாளை கையளிக்கப்படும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளது. இதில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி இலங்கையை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் ஆவணமொன்றை அமெரிக்கா சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது அரசாங்கமொன்று பின்பற்ற வேண்டிய நியதிகளை பின்பற்றியதாக அதில் தெரிவிக்கப்பட உள்ளதாகவும், போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை என கூறப்பட உள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
No comments:
Post a Comment