பெண்கள் வேலைக்குத் தேவை என்ற முகவரியில்லாது கைத்தொலைபேசி இலக்கத்துடன் கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன.கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில்
பெண்கள் வேலைக்குத் தேலை ஒருநாளுக்கு 700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்ட கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துண்டுப்பிரசுரத்தில் பெண்களுக்கு என்ன வேலை, எந்த இடத்தில் வேலை, எந்த நிறுவனத்தில் வேலை என்ற விபரங்கள் எவையுமே குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், அதில் குறிப்பிடப்பட்ட கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது நாம் ஆண்களுக்கு வேலை வழங்கவில்லை, பெண்களுக்கு மட்டுந்தான் வேலை, பெண்களைக் கதைக்கச் சொல்லுங்கள் என்று கூறப்பட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிந்ததன் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் முகவரியற்றவர்கள் மூலம் பெண்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
2009ம் ஆண்டு யுத்தம் முடிந்ததன் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் முகவரியற்றவர்கள் மூலம் பெண்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படியாக வேலைவாய்ப்பு எனக் கூட்டிச் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பலர் காணாமல் போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இப்போதும் அதேபோன்ற முகவரியற்ற கைத்தொலைபேசி இலக்கத்துடன் பெண்கள் வேலைக்குத் தேவை என்ற அறிவித்தல் துண்டுப்பிரசுரத்திலும் சந்தேகம் காணப்படுவதாக அதனை அவதானித்தவர்களால் கூறப்படுகின்றது.
இதனால் கிளிநொச்சி பிரதேச மக்கள் அச்ச உணர்வுடன் காணப்படுகின்றார்கள். இந்தநிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment