June 5, 2015

அம்போவாகும் மகிந்த: மைத்திரியுடன் கைகோர்க்கிறார் தொண்டமான்!

இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸ் எதிர்­வரும் பாரா­ளுமன்றத் தேர்­த­லில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன
தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யி­லேயே போட்­டி­யிடும் என ஜனா­தி­ப­தி­யிடம் நேர­டி­யாக அறி­வித்­தி­ருப்­ப­தாக நம்­ப­க­மாக தெரிய வந்­துள்­ளது.

இதே­வேளை அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்குள் உள்­வாங்­கு­வ­தற்­கென இந்­திய வம்­­சா­வ­ளி­ மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் முன்னாள் அமைச்­சரும் கோப்­பியோ அமை­ப்பின் ஆட்சி மன்ற உறுப்­பி­ன­ரு­மான
பி.பி.தேவ­ராஜின் பெயரை பிரே­ரித்­தி­ருப்­ப­தா­க காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் அறிவித்துள்ளார்.
இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸின் பிர­தி­நி­தி­கள் நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­
சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். இப்­பேச்­சுவார்த்­தையில் தலைவர் முத்­து­ சி­வ­லிங்கம், பொதுசெய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இதன்­போது அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இந்­திய வம்­சா­வ­ளி மக்­க­ளைப் ­பி­ரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் வகை­யி­லான பிரதிநிதி ஒருவர் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளமை மற்றும் எதிர்க்­கால அர­சியல் தேர்தல் களம் ஆகிய விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.
இச்­சந்­திப்பு தொடர்பில் பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்ட இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தீபத்திடம் கூறும்போது, அடுத்த தேர்தலில் மைத்திரி கூட்டணியின் கீழ் போட்டியிடுவதாக வாக்களித்துள்ளதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்-
ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யின்­போது அடுத்து இடம்­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்தல் தொடர்பில் விரி­வாக பேசப்­பட்­டது.
அத்­துடன் நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத்­தேர்­தலில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூட்­ட­ணி­யி­லேயே போட்­டி­யி­டு­வ­தென்ற தீர்­மா­னத்­தையும் நாம் தெரி­வித்­துள்ளோம். அந்த வகையில் அடுத்து வரும் பொது தேர்­தலில் இ.தொ.கா. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணியில் போட்­டி­யி­ட­வுள்­ளது என தெரி­வித்தார்.
இதே­வேளை மேற்­படி சந்­திப்பு தொடர்பில் காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான முத்­து­சி­வ­லிங்கம் கூறு­கையில்-
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்று நாம் சந்­தித்து பேசினோம். எமது மாகாண சபை உறுப்­பி­னர்­களை ஜனா­தி­ப­திக்கு அறி­மு­கப்­ப­டுத்தி வைக்கும் வகை­யி­லேயே இந்த சந்­திப்பு அமைந்­தி­ருந்­தது.
அது மாத்­தி­ர­மின்றி பல்­வேறு விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­டது. குறிப்­பாக எதிர்­கால அர­சியல் செயற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்பு பேரவை தொடர்­பிலும் பேசினோம்.
அர­சி­ய­ல­மைப்பு பேரவை தொடர்பில் கூறு­வ­தெனில் இந்­தி­ய­வம்­சா­வ­ளி மக்­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் வகையில் தற்­போது பெய­ரி­டப்­பட்­டுள்ள பேர­வையில் எவரும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எமது மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் என்ற விட­யத்தை நாம் ஜனா­தி­ப­திக்கு எடுத்து கூறி­னோம். மலை­யக மக்­களின் வாழ்க்கை நிலை மற்றும் அர­சியல் கலா­சாரம் அறிந்த ஒரு­வ­ரான முன்னாள் அமைச்­சரும் கோப்­பியோ அமைப்பின் ஸ்தாப­கரும் ஆட்சி மன்ற உறுப்­பி­ன­ரு­மான பி.பி.தேவ­ராஜின் பெயரை நாம் பிரே­ரித்து ஜனா­தி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தினோம்.
மேலும் இவ்­வி­டயம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் பேசிய போது அவர் பொறுப்­பாக பதி­ல­ளிக்­க­வில்லை. இத்­த­கைய விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு எடுத்துக்கூறி விளக்கமளிக்கப்பட்டதையடுத்து தேவராஜின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள விடயம் சம்பந்தமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே இணைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம். அத்துடன் எதிர்காலத்திலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் பேசப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment