May 18, 2015

முள்ளிவாய்க்கால் ஆறாத்துயருடன் ஆறு ஆண்டுகளைக் கடக்கின்றது.. அவலவாழ்வுக்குள் இருந்து மீண்டெழு தமிழினமே!! - ஆதவன்!

உலகத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் எங்கள் தேசத்தின் ஒரு சிறிய மூலைக்குள்  ஒரு மாபெரும் இனப்படுகொலை நடைபெற்று ஆறு ஆண்டுகள்ஆகிவிட்டன பலநூறு முட்களால் இதயத்தில்
குத்துவதைப்போன்ற வலியினைக்கொடுக்கின்றது முள்ளிவாய்கால் என்ற ஒரு சொல் அங்கே நடைபெற்ற பேரவலம் எமக்கல்ல உலகத்தில் எந்த ஒரு இனத்திற்குமே வந்துவிடக்கூடாது என்று தமிழர்களாகிய நாம் இறைவனைப்பிரார்த்தனை செய்கின்றோம்.

முள்ளிவாய்க்காலிலே நடைபெற்றது ஒரு தமிழினப்படுகொலை என்பதை விட அது ஒரு மானிடப்படுகொலை என்பதை உலகம் இன்றுவரைக்கும் ஏற்றுக்கொள்ள
தயராக இல்லை காரணம் தமிழர்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலையின் பங்குதாரர்களாகவும் கூட்டுக்கொலையாளிகளாகவும் ஈழத்தின் அன்டைநாடான இந்தியா உற்பட பல நாடுகள் உள்ளன! எனவேதான் அங்கே கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் கூறிவிட்டு நழுவிக்கொள்கிறனர் முள்ளிவாய்க்காலிலே நடைபெற்றது தமிழினப்படுகொலை அல்ல அங்கே தமிழ் என்ற ஒரு மொழியினைப்பேசுகின்ற மனிதர்கள் தான் கொல்லப்பட்டார்கள்  அங்கே நடைபெற்றது  மனிதப்படுகொலை என்பதனை இந்த சுயநலவாத உலகம் இன்னமும் ஏற்றுக்கொள்வதாக இல்லை இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை காரணம் தமக்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதை தமிழர்களின் பேசும் சக்திகளாகவும் அரசியல் பிரதிநிதிகளாகவும் இருக்கக்கூடியவர்கள் ஏற்றுக்கொள்வதற்கே இனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்கள் தேவைப்படுகின்றது என்றால்  எங்கோ இருக்கின்ற சர்வதேசமும் உலகத்தலைவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள பல நூற்றாண்டுகள் ஆனால் கூட ஆச்சரியம் இல்லை

ஆனால் எந்த ஒரு பாவமும் செய்யாது தமிழ் மண்ணிலே பிறந்த ஒரே குற்றத்துக்காக வீடுவாசல் உறவுகள் உடன்பிறப்புக்கள் என்று அனைவரையும் இழந்து உழைத்து உண்பதற்குக்கூட முடியாது கைகால்களை இழந்து பரிதாபமான நிலையிலே பல்லாயிரம் தமிழர்கள் இன்று ஒவ்வெரு நாட்களையும் ஒவ்வெரு வருடங்களாக மூலைகளுக்குள் முடங்கியபடி கழிந்துக்கொண்டிருக்கின்றனர் இவர்களது இந்த நிலைக்கு காரணமாணவர்கள் நீதிபதிகளாகவும் தர்மத்தின் தலைவர்களாகவும் உலக அரங்கிலே தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு உலகத்தில் எங்கே அனர்த்தம் நடைபெறும் ஓடிச்சென்று உதவிசெய்து தம்மைஉத்தமர்களாக உயர்த்திக்கொள்ளலாம் என்று தினம் தினம்  சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்களே தவிர தம்மால் வஞ்சிக்கப்பட்ட படுகொலை
செய்யப்பட்ட ஓரினம் காலம் முழுதும் கலங்கித்துடித்துக்கொண்டிருக்கின்றதே! அவர்களின் உரிமைகளை இனியேனும் கொடுத்துவிட்டு அவர்களின் தேசத்தில்சுதந்திரமாக வாழ அனுமதிக்கவேண்டுமே! என்ற எண்ணம் கடுகளவேனும் எந்த ஒரு சாதாரண சிங்களக்குடிமனுக்கும் இல்லை

சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் தாம் பிறந்த மண்ணிலே வாழவேண்டும் என்று ஓரினம் ஆசைப்படுவது  எந்த விதத்தினில் பயங்கரவாதமாகும்  தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் ஒரு புனிதமான இனவிடுதலைப்போராட்டத்தினை அழித்தொழித்து இலட்சக்கணக்காணமக்களை சிங்கள அரசுபடுகொலை செய்து சொந்த மண்ணிலேயே புதைத்து இன்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் கண்ணை மூடினாலும் திறந்தாலும் அவலத்தின் அந்தநாட்கள் எப்போதுமே எமக்கு இன்று நடந்ததைப்போலவே வலிகளையும் வேதனையினையும் கொடுக்கின்றது


முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது இந்த நூற்றண்டில் அல்ல, எந்த ஒரு நூற்றாண்டிலுமே எந்த ஒரு இனத்துக்குமே நடந்திருக்காத ஒரு பேரவலம்.ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளை, உலகத்தின் அத்தனை வல்லரசு நாடுகளும் நிராகரித்து, தமிழ்த் தேசிய இனத்தின்நியாயமான உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று முலாம் பூசி, மாசுபடுத்தி, தமிழர்களின் தலையில் தன்னாதிக்க ஆப்பை அடித்தது சர்வதேசம்.

சர்வதேச நாடுகள் அத்தோடு நின்றுவிடாமல், சிறிலங்காவை எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை தமிழ் மக்களுக்குவெளிக்காடியவாறு, மறுபுறத்தில்,  சிங்கள பேரினவாத ஆதிக்க அரசுக்கு ஆலோசனைகளும், இராணுவத்திற்கு தேவையான பயிற்சி உட்பட அனைத்து ஆயுத வளங்களையும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் உட்பட அனைத்து இராணுவ உதவிகளையும் மறைமுகமாக வாரி வழங்கி, முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கு துணை போனதோடு நின்றுவிடாமல், தொடர்ந்தும்
இன்றுவரை சிங்களத்திற்கு துணைபோகிறது

காலமெல்லாம் வலிக்கும் அளவு வலிகளை முள்ளிவாக்காலிலே தமிழினத்திற்கு கொடுத்தது சிங்கள பேரினவாத அரசு.  ஒட்டுமொத்த தமிழினத்தையும் பயங்கரவாதம் என்ற பாரிய போர்வையினால் மூடி,  பூவும், காயும் கனத்த பிஞ்சுகளுமாக அத்தனை தமிழர்களையும் கொன்றெழித்தும், அங்கவீனர்களாக்கியும், மன நோயாளிகளாக்கியும், விதவைகளாக்கியும், அனாதைகளாக்கியும், குற்றவாளிகளாக்கியும், ஒரு பகுதி தமிழர்களை நடை பிணங்கள் ஆக்கிய நிலையில், கொடிய இனவழிப்பை  நடத்தி தற்காலிக முடிவுக்கு கொண்டுவந்ததே தவிர அது இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதை நிகழ்காலம் தெளிவுபடுத்தும்

வெளிப்படையான இனவழிப்பு முள்ளிவாய்க்காலுடன் முடிவிற்கு வந்திருந்தாலும், வெளித்தெரியாத வகையில் நாளுக்கு நாள், அடக்கு முறைகளும், நிலப் பறிப்புக்களும், ஆட்கடத்தல், கொலைகள், ஊடாக சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், மாகாணசபை, அமைச்சர்கள் இருந்தும், சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறையை தட்டிக்கேட்க நாதியற்றவர்களாக இன்று ஈழத்தமிழினம் தவிக்கிறது.

சர்வதேசம் நம்மை காப்பாற்றும் என்று இறுதிவரை நம்பியிருந்தவர்களை சர்வதேசம் ஏமாற்றமடையச்செய்துவிட்டு இன்று மீண்டும் ஏதோ எமக்காக முதலை
க்கன்ணீர் வடிக்கின்றது உன்மையிலே சர்வதேசம் எம்மீது அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் ஆயுத அமைதிப்படுத்தலை அறிவித்து, போராளிகள் அனைவரையும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் முன்னால் நிராயுதபாணிகளாக நிறுத்தி, தமது இறுதி நல்லெண்ணத்தையும், சர்வதேசத்தின் மீது தாம் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் சர்வதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்தது. நிராயுத பாணிகளாக நின்ற போராளிகளை கைது செய்து, நிர்வாணமாக்கி, கண்களையும், கைகளையும் கட்டி தலையிலே சுட்டுப் படுகொலை செய்ததோடு, பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்று குவித்தது இனவெறி சிங்கள அரசு. இதற்காண ஆதாரங்கள் தமிழர்தரப்பிடம் ஏராளமாக இருந்தபோதும் குற்றவாளிகள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை

தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தருவார்கள் என்று கடைசிவரை சர்வதேசத்தை மலையென நம்பியவர்களை கழுத்தறுத்து மலைக் குவியல் போல் குவித்தது சர்வதேசம். சர்வதேசத்தின் கண்காணிப்பில், ஐக்கியநாடுகள் சபையின் உயர் பிரதிநிதிகள் முன்னினையில் தமிழர் இனவழிப்பே நடத்தி முடிக்கப்பட்டது.

தமது கண்முன்னே நடைபெற்ற இனவழிப்பினைப்பற்றி தமக்கு எதுவுமே தெரியாதது போல் இன்று தீர்மானங்களை நிறைவேற்றி தமிழர்களுக்கு புதினம் காட்டுகிறது ஐநாவும், அமெரிக்காவும். விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்க்கடிக்கப்பட்ட, பயங்கரவாத இயக்கமாக சிறிலங்காவும், இந்தியாவும் அமெரிக்காவும் அறிவித்து மிகப்பெரிய மலையை மட்டமாக்கி தட்டாந்தரை பாலைவனமாக்கியது வரை அனைத்து துரோகங்களும் வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

அன்று காலி முகத்திடலிலே வெற்றி வேட்டுக்களை ஏவி, போர் முடிந்தது என்றும் ஒட்டுமொத்த விடுதலைப் புலிகளையும் கொன்றெழித்து விட்டோம் என்று பீரங்கிகளாலும் வெற்றி முழக்கமிட்டு கொக்கரித்த சிங்களதேசம், மீண்டும் இன்று புலிகள் புலிகள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது. இதனை ஏன் என்று கேட்பதற்கு இன்று நாதியற்றவர்களாய் நிற்கும் தமிழர்களை எதுவும் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தொடரும் அவலங்களால் கண்ணீரின் தத்துப் பிள்ளைகளாக தவிக்கின்றது தமிழினம்.

ஏன் என்று கேட்க யாரும் இல்லையோ!!

பேரினவாதப் பூதத்தின் கொடிய கரங்களால் இன்னும் எத்தனை ஈழத்தாயின் பிள்ளைகள் நரபலியெடுக்கப்படுவார்களோ  தெரியவில்லை. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது கொஞ்சம் நின்மதிப் பெருமூச்சு விட்டது தமிழினம். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்ட முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும்,  மாகாணசபைக்கான அதிகாரங்களைக் கூட கொடுக்காது சர்வதேசத்தை ஏமாற்றியவாறு, மாகாணசபையின் பொம்மை மனிதர்களாக தமிழர்களை சிங்களப் பேரினவாதம் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றதால் அவலங்களின் அத்தியாயம் தொடர்ந்து கொண்டே போகின்றது.

ஆலகால விசமுண்ட சிவபெருமானுக்கும் இலங்கைத் தீவுக்குள் இருப்பிடம் இல்லை என்று  கோயில்களைக் கூட இடித்தழித்துக் கொண்டிருக்கின்றது.

சிங்களப்பேரினவாதம் எத்தகைய கொடுமைகளைச் செய்தேனும் இலங்கைத்தீவை தனிச் சிங்களத் தீவாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காக, தமிழர்களின் அடையாளத்தினை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாமல் யாரை வேண்டுமானாலும்
சிறையில் தள்ளிப் பூட்டிவிடுவதற்கு பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒரு கொடிய அஸ்திரத்தினை சிங்கள அரசு தமிழன் வீட்டு பிள்ளைகள் மீது ஏவி விட்டுக்கொண்டே இருக்கின்றது.

உலக நாடுகளின் சட்டப் புத்தங்கங்கள் ஒருநபர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றது. எத்தனை அப்பாவி இளைஞர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் சிறைகளிலே இன்னமும் வாடிக் கொண்டிருக்கின்ரனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலே 18 மாதங்கள் சிறையிலே அடைக்கும் அளவு அதிகாரத்தினை சிங்கள தேசத்தின் சட்டப் புத்தகத்தில் வைரைந்துள்ளது பேரினவாதம். எத்தனை ஆயிரம் இளைஞர்கள் இன்னமும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலே பல வருடங்களை சிறையிலே
சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.


என்ன செய்யப் போகின்றாய் தமிழினமே!

போரம்மா போரம்மா என்ற வீரமறவர்களின் வெற்றிக் கோசங்கள் ஓய்ந்து போய் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்டு, களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களில் இருந்த கல்லறைகள் இடித்தழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகளும், இராணுவ முகாம்களும், விளையாட்டு மைதானங்களும் அவரச அவசரமாக உருவாக்கப்பட்டு வீர மறவர்களின் நினைவாலயங்களைக் கூட அழித் தொழித்து கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது சிங்களப் பேரினவாதம்.

நொடிப் பொழுதிலே தன் உயிர் பறந்து போனாலும், காலமெல்லாம் தன் கல்லறைகளை தமிழ் மண் சுமக்கும் என்ற நம்பிக்கையிலே உடலிலே குண்டைக்  கட்டி எதிரியின் இலக்குகளைத் தாக்கி அழித்த அந்த வீரர்களின் சிறிய ஆசையினைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாய் மாறிப்போன தமிழினமே இன்னும்
எத்தனை காலம் இந்த அவலங்கள் எமக்கு.


இதில் இருந்து எப்போது மீண்டெழுவாய் ??????

எத்தனையோ போரளிகள் புனர்வாழ்வு என்ற பெயரிலே இன்னமும் வதை முகாம்களில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர்,  தமிழ் மண்ணின் விடிவுக்காய் போராடிய வீரப் புதல்வர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று இன்னமும் தூற்றிக் கொண்டிருக்கின்றது. எத்தனை காலம் எங்கள் வீரர்களை இந்த இழிவுக்குள் வாழ அனுமதிக்கபோகின்றோம், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராளிகள் என்ற உன்மையினை எப்போது உலகின் காதுகளில் உறைக்கும்படி சொல்லப் போகின்றோம்

கொலை கொள்ளை கற்பழிப்பு என்று உலகத்தில் உள்ள அத்தனை கொடுமைகளையும் செய்த சிங்கள இராணுவம், இன்னமும் பாதுகாப்புப் படையினர் என்று கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் தமிழின அழிப்பினை செய்த கொடுங்கோல் அரசையும் அதன் ஆதரவு சக்திகளையும் எப்போது கூட்டிலேற்றப் போகின்றோம்? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் குற்றவாளிகளே இன்று நீதிபதிகளாக போர் க்குற்ற விசாரணை என்ற பெயரிலே சர்வதேசத்தையும் மனிதநேய அமைப்புக்களையும் ஏமாற்கொண்டிருக்கின்றது உலகத்தில் எந்த ஒரு நாட்டிலாவது குற்றவாளிகளே தீதிபதிகளாக தீர்பு எழுதியதாக வரலாற்றில் இதுவரையில் பதியப்பட்டுள்ளதா ஆனால் வார்த்தைகளால் வர்னிக்கமுடியாத அநீதிகளை தமிழர்களுக்கு செய்தவர்கள் இன்னும் எத்தனைகாலங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்போகின்றோம் ?சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் தமது இனம் விடுதலை பெறவேண்டும் என்று ஆசைப்பட்ட என்ற ஒரே காரணத்துக்காக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் தாய்மார்கள் மதகுருமார்கள் படித்த பட்டதாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கவிஞர்கள் பாடகர்கள் வைத்தியர்கள் என்று எத்தனை எத்தனை தமிழர்களை நரபலி எடுத்தார்கள் சிங்களபேரினவாதிகள் இவற்றுக்கெல்லம் நீதியும் நியாயமும் தமிழர்களுக்கு கிடைப்பது எப்போது?


சர்வதேசத்திற்கு என்ன தலைவிதியா எமக்காக போராட?


உலகநாடுகள் கேட்கும்,உலகம் நீதி சொல்லும், என்று வெறும் உலகத்தை நம்பி ஆறு ஆண்டுகளை தாண்டிவிட்டோம். உலகத்தில் நீதியும், நியாயமும்  இருந்திருந்தால் முள்ளிவாய்காலிலே பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்படிருப்பார்களா? சர்வதேசத்திற்கு எம் மீது கரிசனை இருந்திருந்தால் முள்ளிவாய்யாலிலே தமிழினம் அழிக்கப்பட்டபோது தடுத்து நிறுத்தியிருப்பார்களே !

சாகட்டும் தமிழன் என்று வேடிக்கை பார்த்தவர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு நீதி வழங்குவார்கள்? உலகம், உலகத்திற்கு அப்படி என்ன பாசம் எம்மீது  செத்துப்போன பிள்ளையினை புதைத்துவிடு என்று சொல்லும் நரிகளாகவும், மரத்திலே கட்டிவிடு என்று சொல்லும் , கழுகுகளாகவும் தான் உலகநாடுகள் இருக்கின்றன.

மருந்து, உணவு, சிறு பிள்ளைகளுக்கான பால்மா, உற்பட அனைந்து அத்தியாவசிய பொருட்களையும் தடைசெய்து பட்டினிப் பேயை ஏவி தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் வன்னிக் காடுகள் எங்கும் நச்சு வாயுக் குண்டு மழை பொழிந்து இலட்சக் கணக்கான மக்களை கொன்றுகுவித்து இனவழிப்பு செய்தது
சிங்கள இனவாதம். எங்கு பார்த்தாலும் அவலம், சாவு, ஒப்பாரி, பசி, தாகம், ஏக்கம், யாருக்கும் யாருடைய ஆறுதலும், அனுதாபமும் கிடைக்கவில்லை.

சர்வதேசத்தில் உதவிகளுக்கு என பல நூறு அமைப்புக்கள் இருந்தும் யாரும் எமது மக்களுக்கு உதவ முன்வரவில்லை, அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டு சிறிய நிலப்பரப்பிற்குள் முடக்கி வைத்து தமிழின அழிப்பை சிங்களம் நடத்தி முடித்தது. வீரமும் தீரமும் நிறைந்த போராளிகளை மன்ணைக்காப்பதா?
மக்களைக்காப்பாற்றுவதா என்ற இக்கட்டான நிலைக்குள்ளே தள்ளி மாவீரம் கொண்ட தமிழன் முதுகில் வஞ்சகமாக குத்தி ஒரு மனிதகுலத்திற்கெதிரான இனப்படுகொலையினை செய்துவிட்டு முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதைப்போல தனது படுகொலைகளை மறைத்துவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்று கூறி  இணக்க அரசியலுக்கு தமிழர்தரப்பிடம் இரு கைகளையும் நீட்டியபடி நின்றுகொண்டிருக்கின்றது சிங்களப்பேரினவாதம்


நடைபெற்றுமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரலவத்தில் இருந்து இன்னமும் தமிழினம் மீண்டெழுந்துகொள்ளமுடியாது தவித்துக்கொண்டிருக்கின்றது ஆனால் எமது தமிழ்த்தலைமகள் சில சிங்களதேசத்தின் ஊதுகுழல்களகவும் சிங்கள மக்களின் விருப்பத்துக்குரியவர்களாகவும் மாறியுள்ளமை மிக வேதனையை குடுப்பதோது எமது இனவிடுதலைப்போராட்டத்திற்கு பாரிய பின்னடைவினையும் கொடுக்கின்றது சிங்கள்தேசத்தின் நலன்விரும்பிகளாகவும் அடிவருடிகளாகவும் இருப்பவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக இனப்பிரச்சினை என்ற ஒன்றையே தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கின்றமை கண்டிக்கத்தக்க விடயம் தமிழினமே இந்த நிலை இன்னும் எத்தனைகாலங்கள் எமக்கு வெறும் போலி அரசியலுக்காக விலைமதிக்கமுடியாத எமது விடுதலைப்போராட்டத்தினை பகடக்காய்களாக வைத்து சுயநலவாத அரசியல் செய்யும் நபர்களை இன்னமும் எதனை காலம் விட்டுவைக்கப்போகின்றோம்

ஈழ விடுதலைப் போரையும், விடுதலைப் போராளிகளையும் வைத்து இன்னும் எத்தனை காலம் வெறும் அரசியல் செய்து கொண்டே இருக்கப்போகின்றோம் ஒட்டு மொத்த தமிழினமே வெட்கப்படவேண்டும்.

எம் விடுதலைக்காய் போராடிய வீரமறவர்கள்  மரணித்துப் போன பின்னும், நாம் அவர்களின் வெற்றுடலை காட்டி உலகத்தில் நீதி கேட்கின்றோம். இனவெறி அரக்கர்களால் சீரழிக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் பிணங்களாக கிடக்கும் எம் அக்கா, தங்கயரை உலகமெங்கும்  காட்சிப் பொருளாய் காட்டுகின்றோம்! பருவமெய்த நாள் முதல் தன் வாழ்நாளில் உயிரிலும் மேலாக நினைத்து பாதுகாத்த பெண்மையினை உலகம் முழுவதும்  திரையிட்டுக் காட்டி நீதி கேட்கின்றோம் தன்மானத்துடன் வாழ ஆசைப்பட்ட எத்தனையோ மானத்தமிழிச்சிகள் மானபங்கப்பட்டு கொல்லப்படுவதை உலகத்துக்கு திரையிட்டுக்காட்டுகின்றோம் ஆனால் இந்த இன அழிப்பினைச்செய்த சிங்கள இனவெறி அரசுடன் உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்களை ஒன்றாகத்திரட்டி நிலம் களம் தமிழகம் என்ற மும்முனைகளாலும் தாக்கி பல அரசியல் நெருக்கடிகளை சிங்களதேசத்திற்கு கொடுத்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகிடைக்கும்வரை போராடவேண்டிய உந்துதலை கொடுக்கவேண்டிய அரசியல் தலைவர்கள் இன்று சிங்கள தேசியவாதிகளாகவும் சிங்கள ஆட்சியாளர்களின்விருப்பத்துக்குரியவர்கவும் மாறி இனவிடுதலைப்போராட்டத்திற்கு ஒரு வேகத்தடையினை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது இப்போதுவெளிச்சத்திற்கு வருகின்றபோதும் கிளர்ந்தெழுந்து போராட்டங்களைசெயவேண்டிய தமிழர்களும் இன்றைய இளைய தலமுறையினரும் கையாலாகதவர்களாகஇருப்பதால் இனத்துரோகிகளின் இனப்பெருக்கம் நீண்டு செல்கின்றது.

இலங்கையில் தமிழர்களாகப்பிறந்த ஒரே குற்றத்திற்காகவும் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட காரணத்துக்காகவும் எமக்கு சிங்களதேசத்தினால் இழைக்கப்பட்ட கொடுமைகளும் அநீதிகளும் மறக்ககூடியவையா அல்லது மன்னிக்கக்கூடியவையா?விடுதலைக்காக எத்தனைஆயிரம் வீரர்கள் இந்த மண்ணிலே விழுந்தார்கள் சுதந்திரம் என்ற ஒன்றுக்காக எத்தனை சுதந்திரங்களை இழந்தோம் அருமையான இனிமையான பருவகாலங்களைசிறைகளிலும் சிங்களத்தின் முள் வேலிகளுக்குள்ளும் கழித்தோம் எத்தனையாயிரம் துயரங்களை சுமந்தோம்  இன்றுவரை சுமக்கின்றோம் என்றோ ஒருநாள்எமக்கான வாசல்கதவுகள் திறக்கப்படும் என்ற ஒரே நம்பிக்கையில் மட்டுமே நீதியும் நியாயமும் நிரந்தரமாக தூங்கிவிடாது நிச்சயம் தர்மம் ஒருநாள் வெல்லும்அது இன்றல்ல நாளை அல்ல என்றோ ஒருநாள் -அதுவரை உறுதியுடன் போரடவேண்டியது ஒவ்வெரு தமிழனதும் கடமையாகும் நெல் விதைத்தால் ஒருபோதும்புற்கள் முளைக்காது வீரர்கள் விதைக்கப்பட்ட இந்த மண்ணில் கோழையாக எவனும் பிறக்கமாட்டான் தட்டுவோம் கதவுகள் திறக்கும்வரை

சிங்களப்பேரினவாதம் எமக்கும் எம் இனத்திற்கும் செய்த கொடுமைகளுக்கு நிச்சயமாக தண்டனை கொடுக்கப்படவேண்டும் அதற்காக புலம் களம் ஆகிய இரண்டுடனும்எமது தாய் தமிழகத்தையும் இணைத்து பலம்மிக்க சக்தியாக அணிவகுத்து போராடுவோம் எமது வீர மறவர்கள்மீது சபதம் எடுப்போம் இறுதிவரை எமது இனவிடுதலைப்போராட்டத்தினை முனெடுப்போம் குருதியில் குளித்தேனும் அதை அடுத்த சந்ததிக்குப்பெற்றுக்கொடுப்போம் அதைவிடுத்து சுயநலவாத அரசியல் வாதிகளின் பின்னே சென்று பிரிவினைவாதங்களையும் குரோதங்களையும் எமக்குள்ளே வளர்த்துக்கொண்டு சிங்கள இனவாதப்பிசாசுகளின் இரையாகிப்போகாதுஎமக்கான தீர்வுக்காக புதிய புதிய யுத்திகளைக்கண்டு புதிய புதிய  வழிகளிலே போராடுவோம் இலங்கைத் தீவில், தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரனவாத அரசு நடத்தியது இனவழிப்பே என்பதை சர்வதேசத்தை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டிய தார்மீகக் கடமை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு என்பதை  உணர்த்து, அனைவரும் தம்மாலான அனைத்து வழிகளிலும் சர்வதேசம் நோக்கிய எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இன்றைய
காலத்தின் உடனடி தேவை

பலநூறு வீரர்கள் வீழ்ந்து விதைகளாய் புதைந்துபோன இன்றைய நாளிலே ஒவ்வெரு தமிழனும் இதய அறைகளிலே தீபம் ஏற்றி விடுதலைக்காக விறகாகிப்போன அந்த வீரர்களை நினைவுகூர்ந்து உறுதிகொள்வோம் அக்கினிக்குஞ்சுகளாக சிறகுகளைவிரிப்போம் அணி அணியாக திரண்டு இனவிடுதலைக்காக போராடுவோம் எத்தனை காலங்கள் கடந்தாலும் உங்கள் கனவுகளை நனவாக்கி எங்கள் மண்ணையும் மக்களையும் ஆக்கரமித்த கொடிய சிங்களபேரினவாதத்தின்  மரண ஓலங்களை மாவீரர்களுக்கு மணியோசையாக ஒலிக்கச்செய்வோம் இது சத்தியமான எங்கள் தலைவன்மீதும் சரித்திரமான எங்கள் மாவீரர் மீதும் சத்தியம் இது சத்தியம்


-ஆதவன்

No comments:

Post a Comment