May 18, 2015

பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

இன்று பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் இருந்து  750க்கு கிழ் பட்டமக்களுடன் ஆரம்பமான முள்ளிவாய்கால் பேரணி மெல்ல மெல்ல நகர்ந்து 17மணி போல றிப்பிப்பிளீக் என்ற இடத்தை வந்து சேர்ந்தது. அங்கு ஏற்பாடு செய்யப்பட மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.முதலில் அறிமுக
உரையினை தமிழிழப் பேரவையின் சார்பில் மனோகரன் அவர்கள் நிகழ்த்திய பின்பு   ஒரு வரவேற்று நடனம் இடம்பெற்றது அதை தொடர்ந்து  புலம்பெயர் தேசத்தில் ஏற்கனவே வெளியாகி கொண்டிருக்கும் ஈழநாதம் பத்திரிகையின் வரிசையில்  பிரான்சில் இருந்து ஜெயராஜ்   தலைமையில் ஈழநாதம்  பத்திரிகை வெளியீடு செய்வதாக அறிமுகம் செய்யப்பட்டது.இந்த பத்திரிகையின் வெளியீடும் இடம்பெற்றது  பத்திரிகையினை   ஜெயராஜ் வெளியீட்டு வைக்க தமிழகத்தில் இருந்து வந்திருந்த திருமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



No comments:

Post a Comment