April 28, 2015

இந்தோனேசியாவில் இதயத்தில் சூடு பட்டு இறக்கப் போகும் மயுரனின் இறுதிக் கணங்கள் இதோ( வீடியோ, படங்கள் இணைப்பு)

அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது-


இன்று  செவ்வாய் மாலை 2.00 மணிக்கு அவர்களுக்கு இறுதிவிடை கொடுப்பதற்க்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு இன்று நள்ளிரவில் தண்டனை நிறைவேற்றப்படுவார்கள்.
பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடுபதினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.

அன்ரு சான் அவரது இறுதி மணித்தியாலங்களை அவரது குடும்பத்தினருடன் தேவாலயத்தில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.மயூரன் சுகுமாறன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு இதயத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அந்த சூட்டில் உயிர் பிரியாவிட்டால் தலையில் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.

மயூரன் சுகுமாறன் தனது இதயத்தில் துளை விழுவது போல ஓவியம் தீட்டியுள்ளார்.

அவர்களுக்கான பேழைகள் தயார் செய்யப்படுவதை படத்தில் காண்கிறீர்கள்.

இந்த செய்தியைப் படிக்கும்போது எவ்வளவு வேதனையாக உள்ளது
இறுதி மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?
அவர்களது குடும்பத்தினர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?

8.3 கிலோகிராம் ஹீரோயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற குற்றதிற்காக இவர்கள் இருவரோடு மேலும் ஏழு இளைஞர்களும் 2005 இல் கைது செய்யப்பட்டார்கள் . ஏனையோருக்கும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இவர்கள் செய்த குற்றம் சமூகத்தைச் சீரழிக்கும் மோசமான குற்றம்தான் .


கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியில் இவர்களைப் பார்த்து பார்த்து , எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல ஆகிப்போனார்கள். எனக்கு ஆரம்பத்தில் இவர்கள்மீதிருந்த கோபம் தணிந்து இப்போதெல்லாம் அனுதாபம்தான் தோன்றுகிறது.
இந்த இளம் வயதில் மரணம் தேவையா ?


‘அறியாத வயதில் குற்றம் செய்துவிட்டார்கள் . ஆனால் இன்று முழுமையாகத் திருந்திவிட்டார்கள்.’ என்கிறார் இவர்களின் மத போதகர்.
(இவர்கள் சுடப்படும்போது சாட்சியாக உடன் இருக்கப் போகிறவர் . இவர் மயூரன் மற்றும் சானின் விருப்பத் தெரிவு )


எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது . இவர்களது குடும்பத்தினர் எப்படி ஜீரணித்துக் கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை .
சானுக்கு ஒரு காதலி இருக்கிறார் . அவர் கடந்த பத்து வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். சனின் காதலியும் , சகோதரனும் , தாயாரும் கடந்த பலமாதங்களாக இந்தோனேசியாவில் தங்கியிருக்கிறார்கள்.

சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை .
“அவனை சுட்டுக்கொன்ற பிறகு மீதமிருக்கும் காலங்களை நாங்கள் எப்படி கழிக்கப்போகிறோம் ? ” என்று தங்கை அழுகிறார்

மனிதவுரிமை அமைப்புகளும் அவுஸ்திரேலியாவும் எவ்வளவோ போராடிவிட்டன.ஒன்றுமே பலனளிக்க .இந்தோனேசியப் பிரதமரின் மனதை மாற்றுவதற்க்காக இந்த இறுதி மணித்தியாலங்களில் கூட அவுதிரேலியப் பிரதமர் ஒரு பிரதிநிதியை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நம்பிக்கை 99.9 வீதம் குறைந்துபோய்விட்டது.

இந்த இறுதி மணித்துளிகளில் அவர்களதும், அவர்களைப் பெற்றவர்களது மனநிலைகள் எப்படியிருக்கும் ?

அவர்களின் மரணத்தின் பின்னால் பெற்றோர் உற்றாரின் மீதமுள்ள நாட்கள் எப்படிக்கழியும் ?

இவற்றைச் சிந்தித்தால் போதைப்பொருட்களை கையாள யாரும் சிந்திக்க மாட்டார்கள் .
தொடர்புடையவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்க்காக இதைப் பதிவிடுகிறேன்.

No comments:

Post a Comment