வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி யாழ். மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2012ஆண்டு முதல், பட்டம் பெற்று வெளியேறிய பட்டதாரிகளுக்கு, அரச நியமனங்கள் வழங்கப்படுவதாக கூறி வருடக்கணக்கில் ஏமாற்றி வருவதாகவும், நியமனங்களை விரைந்து வழங்குமாறும் கூறியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி யாழ். மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 2012ஆண்டு முதல், பட்டம் பெற்று வெளியேறிய பட்டதாரிகளுக்கு, அரச நியமனங்கள் வழங்கப்படுவதாக கூறி வருடக்கணக்கில் ஏமாற்றி வருவதாகவும், நியமனங்களை விரைந்து வழங்குமாறும் கூறியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகள் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்தியமையால் பொதுமக்கள் தங்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என எழுத்து மூலமான உறுதிமொழியை உரிய தரப்பினர் தரும்வரையில் தங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என பட்டதாரிகள் கூறினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், நான் ஒரு அரச அதிகாரி. முடிவுகளை என்னால் கூறமுடியாது. மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் உங்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவேன். மத்திய அரசின் முடிவுகளை நான் செயற்படுத்துவேன் எனக்கூறினார்.
மாவட்டச் செயலகத்துக்குச் சென்றுவரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டதுக்கிணங்க, மாவட்டச் செயலக வாயிலுக்கு ஒதுக்குப்புறமாக நின்று பட்டதாரிகள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
|
No comments:
Post a Comment