நேற்றைய நாளில் உலகை சாட்சியாக வைத்து ஒரு தமிழன்
கொடூரமாக கொல்லப்பட்ட துன்பத்தில் இருந்து தமிழினம் விடுபட முன்பு அதிர்ச்சி தரும் மற்றுமொரு தமிழ் இளைஞனின் இழப்புச் செய்தியாக இன்று கிடைத்தது இந்த செய்தி.
சிதம்பரத்தை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் ஆந்திராவில் 20 தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து நீதி கேட்டு 28.4.2015,நேற்று மாலை 3.00 மணியளவில் சென்னையில் நடந்த தமிழர் நீதி பேரணியில் காவல் துறையின் அடக்கு முறையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி மருத்துவ மனைக்கு உடன் எடுத்துச் செல்லப்பட்டு பின்பு 29.4.2015,இன்று காலை மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி ஆறாத் துயரில் தமிழ் மக்களை மீண்டும் ஆழ்த்தி உள்ளது.
கிண்டி பேரணியில்..காவல்துறையின் அலட்சியத்தாலே அப்பாவி பலியானார். கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்..
தோழர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற வழி இல்லாமல் ஒரு மணி நேரம் தவித்தனர்..
கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க அவர் ரயில் தண்டவால வழியை கடக்க முயன்றார்.அப்போது கையில் வைத்திருந்த கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்தது.
எங்கள் தமிழினத்துக்க்காக அறவழிப் போராடி தன் உயிரை துறந்த அந்த இளைஞரின் இழப்பு துயர் தரும் செய்தியாக இன்று எமக்கு கிடைத்துள்ளது. அவரின் இழப்பில் துயர் கொள்ளும் அனைத்து உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழர்களின் குரலாக உயிரீகம் செய்த தோழனின் மரணம் இது வரை எழ மறந்த தமிழர்களை இனியேனும் எழச் செய்யட்டும்.
|
No comments:
Post a Comment