கிளிநொச்சியில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றி
வந்த நூற்றுக்காணக்கான ஆண்களும் பெண்களும் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மிக முக்கியமான மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களில் 200 பணியாளர்களை தவிர ஏனைய 450 பணியாளர்கள் நிதியின்மையால் வேலையில் இருந்து நிறுத்தப்பட போவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும்
நிறுவனத்தில் பணியாற்றி வந்த நூற்றுக்காணக்கான ஆண்களும் பெண்களும் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மிக முக்கியமான மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களில் 200 பணியாளர்களை தவிர ஏனைய 450 பணியாளர்கள் நிதியின்மையால் வேலையில் இருந்து நிறுத்தப்பட போவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பணியாளர்கள் நிறுவனத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இருக்கின்ற நிதிக்கமைவாக அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே காலத்தில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வந்த எங்கள் மீதும் மனிதாபிமானம் காட்டுங்கள் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
No comments:
Post a Comment