April 27, 2015

குடும்பத்தினரை சந்தித்த மரண தண்டனைக் கைதி மயூரன் சுகுமாறன்!

இந்தோனேசியாவில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 8 பேரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் அனைவரும் நுசாகம்பங்கள் தீவில் உள்ள சிறையில் தூக்கிலிடப்படவுள்ள நிலையில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான அறிவித்தல், குறித்த 10 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மயூரனின் வழக்கறிஞர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் 72 நேரமே உள்ளதால், மயூரன் மற்றும் சான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் எப்படியாவது தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியா முயற்சி செய்து வருகின்ற நிலையில், மரண தண்டனையை நிறுத்திவிட்டு அவுஸ்திரேலியாவுடன் இணைந்து உரிய தீர்வு காண வேண்டும் என இந்தோனேசியாவிடம் பிரான்சு வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment