March 23, 2015

மீளக்குடியமர அனுமதிப்பதாயின் வீடுகள் ஏன் இடிக்கபபட்டன? மைத்திரி, ரணில் முகமூடியை கிழித்தார் விக்கினேஸ்வரன்!

வலி.வடக்கினில் உறுதி அளிக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை.அத்துடன் மக்களது காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு சத்தமின்றி ஆலயங்கள்,பாடசாலைகள்,தேவாலயங்கள் மற்றும் மக்கள்து குடியிருப்புக்கள் இடிக்கப்படுகின்றனவென
குற்றஞ்சாட்டியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
வலி.வடக்கினில் விடுவிக்கப்பட்ட பகுதிகளினில் மக்கள் பயன்பாட்டிற்கென விடுக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் நிகழ்வொன்றினை இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாதுங்க மற்றும் பிரதமர் ரணில் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வினில் பகிரங்கமாக மேடையினில் விக்கினேஸ்வரன் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.


???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

No comments:

Post a Comment