March 23, 2015

என்னத்தை மைத்திரியுடன் கதைப்பது, முதல்வர் வெறுப்பு.!

உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிப்பதாக அரசு உறுதி அளித்தது போன்று காணிகள் விடுவிக்கப்படவில்லை.அரசு சொல்வதை இராணுவம் கேட்கவில்லையா அல்லது நாம் ஏமாற்றப்படுகின்றோமாவென கேள்வி எழுப்பியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப்பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றிருந்தார்.

ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை அவர் பார்வையிட்டார்.
விடுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பாடு விதித்தனர். அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர் விதித்தனர். புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சர் உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை. ஆனால், அந்த வேலி விடுவிக்கப்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில் அவர் ஊடகவியலாளர்களிடையே பேசினார்.


உண்மையை கண்டறியவேண்டும்.அரசு சர்வதேசத்தை ஏமாற்ற நாடகமாடினால் அதனை அம்பலப்படுத்த தவறமாட்டேன்.நாளை ஜனாதிபதி வருவது பற்றி எனக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அறிவிப்பதாக தெரிவித்தனர்.கடைசியினில் அரச அதிபரிடமிருந்தே தகவல் வந்துள்ளது.நிச்சயமாக இந்த ஏமாற்றங்கள் பற்றி பேசுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.CM CV

No comments:

Post a Comment