இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு 54 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 21 மீனவர்களும், தலைமன்னார் கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறீலங்காவின் பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறினார்.
No comments:
Post a Comment