தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் நாடு திரும்புவதற்கு சரியான சந்தர்ப்பம்
வாய்த்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு – தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிக்குள் இருந்தனர்.
சுதந்திரம் இல்லாத நிலைமை காணப்பட்டது.
ஆனால் புதிய அரசாங்கம் இந்த நிலைமைகளை படிப்படியாக இல்லாமல் செய்யும் என்று நம்பிக்கை இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அகதிகள்; நாடு திரும்பி தங்களின் சொந்த இடங்களில் குடியேறுவதற்கு இதுவே சாதகமான காலம் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment