January 26, 2015

பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட இராணுவத் தளபதி திருப்பி அழைக்கப்படுவார்- அமைச்சர் ஜோன் அமரதுங்க!

வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட- தற்போது வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவி வகித்து வரும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை, திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியல் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் 26 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்களை கைது செய்யக் கோரியும், நேற்று ரதுபஸ்வெல மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற சிறிலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ‘பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியருக்கு, முன்னைய அரசாங்கம் வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவியைக் கொடுத்து அனுப்பியிருந்தது என்பதை அறிவேன்.அவர் திருப்ப அழைக்கப்படுவார்’என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment