காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளது கிழக்கு மாகாண தளபதிகளுள்
ஒருவரான ராம் தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி வேம்பு படைமுகாமினில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.விடுவிக்கப்பட்ட அவர் தற்போது விடுதலைப்புலிகளது முன்னாள் போராளிகளை சந்தித்து தனது இயலாமையினை எடுத்துக்கூறியுள்ளதுடன் கிழக்கினை கல்வி ரீதியினில் மேம்படுத்த பங்கெடுக்க அழைப்பு விடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.
தொடர்ந்தும் படையினரது கண்காணிப்பின் கீழேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பயணத்தின் போதெல்லாம் அவர்களும் இணைந்து வருகை தருவதாகவும் குறித்த முன்னாள் போராளிகள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.அண்மையினிலேயே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிலிருந்து ராம் விடுவிக்கப்பட்டதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரியவருகின்றது.

No comments:
Post a Comment