இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்று எதிர்வரும் 12ம் திகதி 26வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வின் போது இந்த அறிக்கை குறித்த விசேட விவாதம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்ந்தோருக்கான உரிமைகள் குறித்த விசேட அறிக்கையாளர் சலாகா பெயானி இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.
இதில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற காணி சுவீகரிப்பு மீள்குடியேற்ற தாமதம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment