August 18, 2014

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் பற்றி தகவல்களை கோரும் இந்தியா!

மலேசியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட இலங்கையை சேர்ந்த சந்தேக
நபர் பற்றிய தகவல்களை வழங்குமாறு இந்தியா, மலேசியாவிடம் கேட்டுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டமை தொடர்பாக மொஹமட் ஹூசைன் மொஹமட் சுலைமான் என்ற இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உறுப்பினர்களுடன் இணைந்து இந்தியாவின் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியா, சர்வதேச பொலிஸார் ஊடாக இந்த சந்தேக நபருக்கு சர்வதேச சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை பிறப்பித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தியா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகவல்களை வழங்குமாறு இந்தியா, மலேசிய அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
சந்தேக நபர் பயங்கரவாத செயல்களுடன் வெளிநாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வது மற்றும் சட்டவிரோத நிதி வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்து விசாரணை நடத்த இந்திய அதிகாரிகள் மலேசியாவுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment