June 8, 2014

யாழ்ப்பாணத்தில் போதைப் பாவனை அதிகரிப்பு : சிறிதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு முறையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு போதைப்பொருட்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டும் அரசு உள்நாட்டு உற்பத்திகள் குறித்து அஜாக்கிரதையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்

No comments:

Post a Comment