பூஸா இராணுவ முகாமில் தடுப்பிலுள்ள கிளிநொச்சியை சேர்ந்த விதவை பெண்ணான பாலேந்திரன் ஜெயகுமாரி (52), கிளிநொச்சி மகாதேவா சிறுவர்கள் இல்லத்தில்
பராமரிப்பிலுள்ள விபூசிகா (13) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவர் சார்பிலும் சட்டத்தரணி வி.சுஷன்திரப்பிரகாசம் நிரஞ்சன், இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இவ்விரு மனுக்களையும் புதன்கிழமை (04) ஆராய்ந்த போதே நீதியரசர்கள், மனுக்கள் மீது ஆதாரம் சேர்ப்பதற்காக ஜுன் 6ஆம் திகதியை குறித்துள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களின் போது இவ்விருவரும் முக்கிய பங்கெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் சிஸிர ஜே.டி. அப்றிவ் மற்றும் பிரியந்த ஜயவர்த்தன ஆகிய நீதியரசர் குழுமத்தின் முன்னிலையில் ஆராயப்பட்டது.

No comments:
Post a Comment