பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
அதிகார சபையின் இணையத்தள அவதானிப்பு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த 35 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment