May 12, 2014

முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு உரிமைகளுக்காகப் போராட வேண்டிய கால கட்டம் வந்துள்ளது; சுரேஷ் எம்.பி. தெரிவிப்பு!

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை இணைத்துக் கொண்டு
உரிமைகளுக்காகப் போராட வேண்டிய காலமும் வந்துள்ளது" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கல்முனையில் கருத்து வெளியிட்டார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் 34 ஆவது வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்னோடியான ஆலோசனைக் கூட்டமொன்று, கல்முனை வாடி வீட்டு வீதியிலுள்ள கட்சியின் கல்முனைப் பணிமனையில் நடைபெற்றது.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.ரவிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்தவை வருமாறு : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும், இன்று வரை கூட்டமைப்பு இதற்கான முன்னெடுப்புக்களைச் செய்யவில்லை எனவும், இங்கு கருத்து வெளியிட்ட முஸ்லிம் சகோதரர்கள், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இதற்கான முன்னெடுப்புகளை எடுத்து அதற்கான அமைப்புகள் உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
நிச்சயம் இக்கருத்து மிக அக்கறையோடு கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். அது மாத்திரமன்றி இன்று முஸ்லிம் மக்கள் இலங்கையில் பௌத்த சிங்கள அரசினால் மிக மோசமான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர். பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவது மட்டுமன்றி அவர்களது கலாசாரம், பண்பாடுகள் கேள்விக்குறியாக்கப்படும் நிலைமையும் உள்ளது. இதற்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்து அந்த மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கு யாரும் முன்னுக்கு வருவதாகத் தெரியவில்லை. இது வெறுமனே சாதாரண விடயமல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின், ஒரு சமூகத்தின் கௌரவம் சம்பந்தமானது. இத்தகைய கௌரவங்களை

No comments:

Post a Comment