சுவிற்சர்லாந்தில் 21 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்Nவையின் இருபதாவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவியரீதியில் (10.05.2014) ஐம்பத்தேழு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.
ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பத்துவரையாக ஐயாயிரத்து நூற்றிப் பத்து (5110) பரீட்சார்த்திகள் தோற்றியிருப்பது தமிழ்க் கல்விச்சேவைச் செயற்பாட்டின் காத்திரமான வெளிப்பாடாகும். பொறுப்பாளர்கள், ஆசிரியர்களென பலநூறு மேற்பார்வையாளர்களுடன் கல்விச்சேவை வித்தியாலயங்களில் கல்விகற்று டிப்ளோமாச் சான்றிதழ்பெற்று உதவி ஆசிரியர்களாகச் சேவையாற்றிவரும் 96 இளம் தளமுறையினரும் இணைந்திருப்பது புலம்பெயர் தேசத்தில் புதிய அத்தியாயமாகும்.
இது எதிர்கால சந்ததியினருக்கு தாய்மொழிப் புகட்டல் என்ற கல்விச்சேவையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதாக அமைகின்றது.
No comments:
Post a Comment