முழங்காவில் பகுதியில் வீடு புகுந்து தாக்கிய இராணுவத்தின் மீது முறைப்பாட்டினை பதிவு செய்யவோ அல் லது நடவடிக்கை எடுக்கவோ பொலிசார் அஞ்சுகின்றனர் என பாதிக்கப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளார்.
முழங்காவில் விஜி வீதியில் வசிக்கும் செ. துரைசிங்கம் , இவரது மகன் து.கௌதமன் ஆகியோரை கடந்த வாரம் இவரது வீட்டிற்குள் அத்துமீறி உள்ளநுளைந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்கினார்.
இவ்வாறு தாக்கப்பட்டதன் காரணமாக 3 நாட்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று தற்போது வெளியேறியுள்ளனர்.
குறித்த தாக்குதல் இடம்பெற்ற தினமும் அதன் பிற்பாடும் முழங்காவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு விடயத்தினைக் கூறியபோதும் அவர்கள் முறைப்பாட்டினை ஏற்க மறுத்து விட்டனர்.
இவ்வாறு முறைப்பாட்டினை ஏற்க மறுத்தமையினால் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுவதாகவும் அத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிலும் இது தொடர்பில் முறையிடப்படவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த நாட்டில் இன்றும் இராணுவம் என்றால் ஒரு நீதியும் சாதாரண மொதுமகனுக்கு ஒரு நீதியுமே வழங்கப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட எமக்கு நீதி கிடைக்கவில்லை யாயின் எமது உயிருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த பொலிசாரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்தனர்

No comments:
Post a Comment