விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, புகைத்தல் மற்றும் மதுபான பழக்கங்களுக்கு உட்படாதவர்கள் எவ்வாறு புனர்வாழ்வின் பின்னர் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளில் 107பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள்?
போராளிகளின் மரணம் தொடர்பாக சர்வதேச மருத்துவ நிபுணத்துவத்துடனான விசாரணை அவசியம். இதற்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது சமுகத்தில் உள்ள பல போராளிகள் வெவ்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர். இவை எவ்வகையான நோய்கள் என்று இனங்காணப்படவில்லை. எனவே அனைத்து போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாது இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அது மாத்திரமன்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கூட ஊசிகள் ஏற்றப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையிலும் அரசியல் கைதியொருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவர் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகக்குறைந்தது அவர்களின் வழக்குகளை தமிழ்ப்பகுதிகளுக்கு மாற்றவேண்டுமென கைதிகள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடடிவக்கை எடுக்க வேண்டுமென்றார்.

No comments:
Post a Comment