இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய புலனாய்வுத்துறையை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பூரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஜ்னு என்ற பெயரைக் கொண்ட குறித்த நபருக்கும் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விசாரணைகள் பூர்த்தி அடைய முன்பதாகவே குறித்த நபரை ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் என குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் குஹுல்லா வனாய் என்ற பெயரைக் கொண்ட இலங்கையர் ஒருவரும் குறித்த மஜ்னு என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும், குஹுல்லா வனாயும் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளில் ஒருவர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிசார் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், குறித்த சந்தேகநபரின் இலங்கைத் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment