August 1, 2016

புலிகளின் தலைவர் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு!

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட செயலணியின் அமர்வு நேற்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வமர்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஏ.எஸ்.உதயகுமார் என்பவரினாலேயே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ்வமர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:- யுத்தம் முடிவடைந்த பின்னரும் அங்கு நடைபெற்ற பல விடயங்கள் தொடர்பான இன்னும் தெளிவுபடுத்தல்கள் இல்லாமல் உள்ளது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்படி பிடிக்கப்பட்டார் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான உண்மைத்தன்மை இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்துமாறு தமிழர் தரப்பில் இருந்தும் யாரும் கோரவும் இல்லை.

சர்வதேச நாடுகளில் இருந்த பயங்காவாதிகள் கூட எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்ற புடைக்கப்ங்களுடன் அச் சம்பவம் தொடர்பான தெளிவாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சதாம் உஷைன் கடாபி ஒசாமா பில்லாடன் போன்றவர்கள் எவ்வாறு பிடிக்கப்பட்டார்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான தெளிவாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இருப்பினும் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிளந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை உண்மைகள் வெளியாகவில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தின் போது கொல்லப்பட்டாரா? எவ்வாறு பிடிக்கப்பட்டார்? எவ்வாறு கொலை செய்யப்பட்டார் அவர் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் யார் அவரைக் கொலை செய்வதற்கான அனுமதியினை வழங்கியது? என்பது தொடர்பான உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment