பிரேஸில் நாட்டில் நடைபெறும் 2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத்தருவதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு 04 நினைவு முத்திரைகளும் ஒரு தபால் உரையும் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது முத்திரையும் தபால் உரையும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment