நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றதால், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கடும் மன வேதனை அடைந்துள்ளார்.
அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை விமல் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புறக்கோட்டையிலுள்ள வீடொன்றில் தனக்கு நெருக்கமானவர்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ள வீரவன்ஸ, தஹாம் சிறிசேனவிற்கு எதிராக சேறுபூசும் சுவரொட்டி ஒன்றை ஒட்ட தீர்மானித்துள்ளார்.
தஹாம் சிறிசேன, வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ள எனக் கூற எவ்விதமான சாட்சியமும் இல்லை என்பதால், பெண்களை சம்பந்தப்படுத்தி சேறுபூசுவது என இறுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தஹாம் சிறிசேனவுடன் ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி கதை ஒன்றை புனைந்து சேறுபூசும் சுவரொட்டி ஒன்றை தயார் செய்யும் பொறுப்பை விமல் வீரவன்ஸவே ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விமல் வீரவன்ஸ அமைச்சராக இருந்த போது அவரது அண்ணன் சரத் வீரவன்ஸ அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் சரத் வீரவன்ஸ விசாரணைகளுக்கு சமூகமளிகாத புறக்கணித்து வருகிறார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் 12 வாகனங்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சரத் வீரவன்ஸவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment