நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அகற்றப்படும் நிலக்கரி, சாம்பல் உள்ளிட்ட கழிவுகளால் குறித்த பிரதேசத்தில் உள்ள விளை நிலங்களும், பொதுமக்களது வீடுகளும் பாதிப்படைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
.
குறித்த கழிவுகள் கடற்கரை ஓரங்களில் கொட்டப்படுவதனால் காற்றினால் இவை அள்ளுண்டு கட்டடங்களில் படிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கழிவுத் துகள்கள் உணவுகள், துவைத்து உலரவிடப்படும் பாடசாலை சீருடைகளிலும் படிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அனல் மின்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், எனினும் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவற்கு தவறுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் தமது விளை நிலங்கள் பாதிப்படைவதாகவும் கொட்டப்படும் கழிவுகள் மீது நீர் விசுறுவது, மணல் இடுவது உள்ளிட்ட தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இல்லையேல் எதிர்காலத்தில் இந்தப் பிரதேச மக்கள் பாரிய நோய் தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment