July 13, 2016

தற்கொலை செய்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை!

நாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கி இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


சமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால் ஒரு தரத்திற்கு இரு  தடவை சிந்திக்காமல் எம்மில் பலர் எடுக்கும் தவறான முடிவே இந்ததற்கொலையாகும்.

அதிலும் தற்போது பேஸ்புக், டுவிட்டர் வலைத்தளங்களில் தமது இறப்புகுறித்து பதிவேற்றிவிட்டு இறப்பது நாகரீக உலகில் பெறுமையான விடயமாககருதுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் பொல்காவல பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி சமிந்த என்றஇளைஞன் ‘என்னுடைய பேஸ்புக் நண்பர்களே நான் இன்றுடன் எனது பேஸ்புக் வாழ்விற்கு  முற்றுப்புள்ளி வைக்கிறேன்.’என்று பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதல் தோல்வியே இதற்கான காரணம் என்று அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

சமிந்தவின் காதலி கடவத்த பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றுவதாகவும், இவ்வாறுகுறித்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் தனது காதலியை சந்திக்கசென்றதாகவும், அங்கு என்ன நடந்தது என்பது புரியாத நிலையில் திரும்பி வந்தசமிந்த இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவனது நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமிந்த புகையிரதத்தில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவனது காதலிக்கு அவளது பெற்றோர் வேறொரு இடத்தில்திருமணத்தை நிச்சயித்திருந்ததாகவும் இதனால் சமிந்த மிகவும் மன இறுக்கத்தோடு காணப்பட்டதாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment