‘கெஸ்ட்ரைட்டிஸ்’ காரணமாக தனது வயிறு ஊதிக்காணப்படுவதாக வீட்டாருக்குப் பொய் உரைத்த பெண் ஒருவர் சிசு ஒன்றைப்பிரசவித்து மலசலக் குழியில் வீசியிருந்த நிலையில் இன்று அக்குழந்தை சடலமாக பேராதனைப் பொலிஸார் நீதவான் முன்னிலையில் வெளியே எடுத்தனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவாவது-
பேராதனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கொஸ்ஸின்ன என்ற இடத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பேராதனை வைத்திய சாலையில் அதிக குருதிப் பெருக்கு காரணமாக சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை அளித்த வைத்தியர்கள் மூலமே அவர் சிசு ஒன்றைப்பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து அவர்கள் வைத்திய சாலைப் பொலிஸாருக்குச் செய்த முறைப்பாட்டையடுத்து பேராதனைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி மேற்படி பெண் கடந்த 12ஆம் திகதி இரவு சிசு ஒன்றை மலசல கூடத்தில் வைத்து பிரசவித்ததாகவும் அக்குழந்தை பிறக்கும் போதே மரணித்து இருந்ததால் அதனை மலசலக் குழியில் வீசியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கண்டி நீதி மன்ற அனுமதியுடன் பதில் நீதவான் மகிந்த லியனகே முன்னிலையில் சடலம் வெளியே எடுக்கப்பட்டது. மேற்படி பெண் தனக்கு கெஸ்ட்ரைட்டிஸ் கோளாறு காரணமாக வயிறு ஊதிப் பெருத்துள்ளதாக வீட்டாருக்கு உண்மையை மறைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் கைது செய்யப்பட்டு பேராதனை வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். பேராதனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment