July 30, 2016

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கான பிரதிநிதி யார்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரை நியமிக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மனித உரிமை விசாரணைகளுக்காக மனித உரிமை அதிகாரி ஒருவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளது.


இந்தப் பதவிக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் அதிகாரி கொழும்பில் இருந்து கடமையாற்ற உள்ளார்.

11 மாத காலப் பகுதிக்கு இந்த அதிகாரி நியமிக்கப்பட உள்ளார், எனினும் தேவை ஏற்பட்டால் அவரது பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என மனித உரிமை அறிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைப் பேரவையின் காரியாலயம் ஒன்றை அமைக்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இவ்வாறு இலங்கைக்கான நியமிக்கப்பட உள்ள அதிகாரியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment