குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஹம்பாந்தோட்டைக்கு சென்றிருந்த சந்திரிக்கா, இந்த அறிவுரையை திசாநாயக்கவுக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தமது அதிகாரிகளுடன் ஹம்பாந்தோட்டையில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போதே சந்திரிக்கா தொலைபேசி மூலம் இந்த அறிவுரையை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment