July 12, 2016

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாணவனுக்கு பிணை மறுப்பு! - சிறையில் இருந்தே பரீட்சை எழுதுமாறு அறிவுரை !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார்.
அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு விடுக்கப்பட்ட விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.

No comments:

Post a Comment